யாழ். அச்சுவேலி தெற்கு வைத்தியசாலை வீதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த கொள்ளையர்கள் தனிமையிலிருந்த பெண்ணை தாக்கிவிட்டு 52பவுண் நகை மற்றும் 16 இலட்சம் ரூபா பணம் என்பனவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் 59 வயதான பெண்ணே பலத்த காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வீட்டின் பின்பக்கமாக வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள் பெண்ணின் கழுத்து பகுதியை கட்டை ஒன்றினால் கடுமையாக தாக்கியதுடன் நுளம்புக்கு பயன்னபடுத்தும் மருந்தை தூவி கொலை செய்ய முயன்றுள்ளனர்.
இத்தாக்குதலினால் அப் பெண் மயங்கியதையடுத்து அவர் அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டிலிருந்த நகைகள் பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள அச்சுவேலி குற்றத்தடுப்பு பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.