வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் – மாவை அவசர சந்திப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வடக்கு முதல்வர் விக்னேஸ்வரன் – மாவை அவசர சந்திப்பு

வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்று உள்ளது.
குறித்த கலந்துரையாடலானது தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் இன்று மாலை ஐந்து மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த கலந்துரையாடலில் அண்மையில் ஏற்பட்ட வடமாகாணசபை குழப்பங்கள் தொடர்பில் ஆலோசனை செய்யப்பட்டுள்ளது.
அரசியல் ரீதியாக குழப்ப சூழ்நிலை நீடித்திருந்த நிலையில் வடமாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கிடையில் சிலர் முறுகலை ஏற்படுத்த முயன்றனர்.
ஆனால் இரு தலைவர்களும் குழப்பமான சூழ்நிலையை பொறுமையாக கையாண்டதுடன், அமைதியாக இருந்தனர்.
இந்த சூழ்நிலையில் தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பானது, எதிர்காலத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு, குழப்பகரமான கருத்துக்களுக்கும் முற்றுப்புள்ளியினை வைக்கும் எனவும் யாழ். செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது, எதிர்வரும் காலத்தில் வடமாகாணசபை நடைமுறை மற்றும் அமைச்சர்களின் நியமனங்கள் தொடர்பில் இருவரும் மனம் விட்டு கலந்துரையாடியிருக்க வாய்ப்பிருப்பதுடன், உள்ளூராட்சி தேர்தல் தொடர்பிலும் கலந்துரையாடியிருக்கலாம் என எமது செய்தியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About UK TAMIL NEWS