அதுவும் பெண்கள் சிறை என்றால் சொல்லவே வேண்டியதில்லை. அங்கு அவர்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் கொஞ்சமல்ல.
இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த மஞ்சு கோவிந்த் ஷெட்டி என்ற பெண்ணிற்கு நடந்த கொடுமை நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பெண்ணை சிறை காவலர்கள் கொடூராக பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் அந்தரங்க பகுதியில் கட்டைகளை வைத்து திணித்துள்ளனர்.
இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் சிறையில் உள்ள சக பெண் கைதிகள் கொந்தளித்தனர். சிறையில் கலவரம் வெடித்தது.
இதில் முக்கியத்துவம் வாய்ந்த விசயம் என்னவென்றால், நாடுமுழுவதும் பிரபலமான ஷீனா போரா கொலை வழக்கின் குற்றவாளியான இந்திராணி முகர்ஜியும் அந்த சிறையில் தான் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் தான் கலவரத்தை தூண்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் அவர் தனது வழக்கறிஞர் மூலம் மஞ்சுவின் பலாத்கார கொலைக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும் தன்னையும் பாலியல் ரீதியாக அதிகாரிகள் துன்புறுத்துவதாகவும் புகார் அளித்துள்ளார்.