ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்த இராணுவ தளபதி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஜனாதிபதியின் கோரிக்கையை நிராகரித்த இராணுவ தளபதி

சிரேஷ்ட இராணுவ தளபதி கிரிஷாந்த டி சில்வாவிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்த யோசனையை அவர் நிராகரித்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வெற்றிடமாகவுள்ள பாதுகாப்பு சபை பிரதானி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு அவரிடம் ஜனாதிபதி கோரியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்பு சபை பிரதானியான ஷீப் மார்ஷல் கோலித குணதிலக்க ஜுன் மாதம் 15ஆம் திகதி ஓய்வு பெற்றுள்ளார்.
இந்நிலையில் அந்த பதவி இன்னும் வெற்றிடமாக உள்ளமைக்கு இராணுவ தளபதியின் நிராகரிப்பே காரணம் என குறிப்பிடப்படுகின்றது.
இதனால் பாதுகாப்பு சபை பிரதானி அலுவலகத்தை மூடி விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி வழங்கிய சேவை நீடிப்பினாலே இராணுவ தளபதி இன்னமும் சேவையில் உள்ளார்.
குறித்த பதவியை நிராகரித்த இராணுவ தளபதி, தனக்கு மீண்டும் சேவை நீடிப்பை வழங்குமாறு ஜனாதிபதியிடம் அவர் கோரியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

About UK TAMIL NEWS