கிளிநொச்சி நகரில் இயங்கி வருகின்ற பிரபல பாடசாலை அதிபர் ஒருவர் உயர்தர மாணவன் ஒருவருக்கு அடித்தமையால் கை எலும்பில் ஏற்ப்பட்ட தாகம் காரணமாக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்
கடந்த ஏழாம் திகதி குற்றச்சாட்டு ஒன்றின் பெயரில் குறித்த மாணவனை அலுவலகத்திற்கு அழைத்து அடித்துள்ளார் இதனால் கை எலும்பில் ஏற்ப்பட்ட தாகம் காரணமாக வைத்திய சாலையில் இன்றுவரை சிகிச்சை பெற்று வருகின்றான் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை அதிபரை எமது செய்தியாளர் வினவிய போது இதற்கான பதிலை தான் வலயக் கல்விப் பணிப்பளறிற்கு அறிவிப்பதாகவும் ஊடகங்களுக்கு தன்னால் பதில் சொல்ல முடியாது எனவும் மறுத்துள்ளார்
மாணவர்கள் குற்றம் செய்தால் தண்டித்தல் உண்மையாகவே வரவேற்கத் தக்க விடயம் ஆனால் மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுமளவிற்கு தாக்குவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும் என பெற்றோர்களும் கல்வியியலாளர்களும் விசனம் தெரிவிக்கின்றனர்