பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பல்விந்தர் கவுர் ஷெர்கில் நான்கு வயதில் இருக்கும் போதே அவரது குடும்பத்தினர் கனடாவுக்கு குடிபெயர்ந்து விட்டனர். வழக்கறிஞர் பட்டம் பெற்ற ஷெர்கில் “ஷெர்கில் அண்டு கம்பெனி’ என்ற பெயரில் சட்ட சேவைகளை அளித்து வந்தார். கனடா நாடு முழுவதும் மனித உரிமை தொடர்பான பல்வேறு வழக்குகளில் அவர் வாதாடியுள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய நீதிபதிகள் தேர்வு முறையின் அடிப்படையில் பல்விந்தர் கெவுரை உச்ச நீதிமன்ற நீதிபதியாக அந்த நாட்டு நீதித் துறை அமைச்சர் ஜூடி வில்சன் ரேபோல்டு வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
மனித உரிமை ஆர்வலரான அவர், அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்ட தலைப்பாகை அணிந்த முதல் சீக்கிய பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஷெர்கில் நியமிக்கப்பட்டுள்ளது, அந்த நாட்டு மக்களுக்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று உலக சீக்கியர்கள் அமைப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.