பன்னிபிட்டிய பகுதியில் அமைந்துள்ள மேம்பாலத்தில் இருந்து பாடசாலை மாணவியொருவர் கீழே குதித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்த பாடசாலை மாணவி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு மேம் பாலத்தில் இருந்து குதித்த மாணவி 11 ஆம் தரத்தில் கல்விகற்பவரெனவும் மாணவி மேம் பாலத்தில் இருந்து கீழே குதித்தமைக்கான காரணம் இதுவரை அறியப்படவில்லையெனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.