செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானத்தை உருவாக்கியது நாசா - Eelatheepam Sri Lankan Breaking NEWS

செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானத்தை உருவாக்கியது நாசா

தற்போது கியூரியோசிட்டி ரோவர் விண்கலத்தினைப் பயன்படுத்தி செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சிகளை நாசா நிறுவனம் மேற்கொண்டு வருகின்றது.
எனினும் இவ் விண்கலம் 10 மைல் தூரத்தினைக் கடப்பதற்கு அரை ஆண்டுகள் வரை தேவைப்படுகின்றது.
இதன் காரணமாக ஆராய்ச்சிகள் தாமதப்பட்டுக்கொன்று செல்கின்றன.
எனிவே இத் தாமதத்தைத் தடுப்பதற்காக ட்ரோன் ரக விமானங்களைப் பயன்படுத்தி ஆராய்ச்சிகளை தொடர்வதற்கு நாசா நிறுவனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி செவ்வாய் கிரகத்தில் பறக்கக்கூடிய ட்ரோன் ரக விமானங்களை அந் நிறுவனம் தயார் செய்து வருகின்றது.
முற்றுமுழுதாக மின்சாரத்தில் செயற்படத்தக்க இந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்தில் உள்ள அமுக்க மாற்றத்தினையும் அறிந்து செயற்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
Vertical TakeOff and Landing (VTOL) எனும் தொழில்நுட்பத்தினை அடிப்படையாகக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.
அதாவது நிலைக்குத்தாக மேலெழுந்து தரையிறங்கக்கூடியன.

About UK TAMIL NEWS