நாட்டின் வர்த்தக சந்தையில் அல்லது மக்களின் பாவனைக்கு எந்தவகையிலாவது பிளாஸ்டிக் அரிசி அல்லது பிளாஸ்டிக் முட்டை கிடைக்கப்பெற்றால் அதுதொடர் பாக சுகாதார அமைச்சுக்கு அறிவிக்குமாறு சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழில் பிளாஸ்டிக் அரிசி நாட்டின் வர்த்தக நிலையங்களுக்கு கொண்டுவரப்பட்டுள்ள தாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
என்றாலும் இதுதொடர்பாக சுகாதார அமை ச்சுக்கு எந்த முறைப்பாடும் கிடைத்ததில்லை.
உலகில் பிளாஸ்டிக் அரிசி உற்பத்தி செய்யும் ஒரே நாடாக சீனா இருந்து வருகின்றது. என்றாலும் இறக்குமதி செய்யப்படும் அனைத்துவகையான அரிசியும் பரிசோதனைக்கு உட்பட்டதன் பின்னரே விடுவிக்கப்படுகின்றது. அத்துடன் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக நிவாரணமாக நாட்டுக்கு கிடைக்கப்பெற்ற அரிசி வகையிலும் இவ்வாறான பிளாஸ்டிக் அரிசி இருந்ததாக இதுவரை எந்த முறைப்பாடும் செய்யப்படவில்லை.
எனவே சமூகவலைத்தளங்களில் தெரிவிக்கப்படுவதுபோன்று நாட்டில் எந்த வர்த்தக சந்தையிலேனும் அல்லது பொதுமக்களின் பாவனைக்கு இவ்வாறான பிளாஸ்டிக் அரிசி அல்லது பிளாஸ்டிக் முட்டை இருப்பதை கண்டால் அது தொடர்பாக சுகாதார அமைச்சுக்கு முறைப் பாடு செய்யுமாறு பொதுமக்களை கேட்டுக் கொள்கின்றேன்.