அலுவலகத்திலோ, வீடுகளிலோ பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களை உலகில் எங்கேயோ இருக்கும் நபர்கள் வைரஸ்கள் போன்றவற்றை அனுப்பி அதை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுகிறார்கள்.
பின்னர் அந்த கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை அழிப்பது, செயல்பாடுகளை முடக்குவது போன்றவற்றை செய்வார்கள். இதற்கு ஹேக்கிங் என்று பெயர்
இந்த முறையில் 2 மாதங்களுக்கு முன்பு இங்கிலாந்தில் உள்ள சுகாதார இணைய தளங்களை முடக்கினார்கள். தற்போது இங்கிலாந்து பாராளுமன்றத்தின் இணையதளத்தை மர்ம கும்பல் ஹேக்கிங் மூலம் முடக்கி உள்ளது.
எனவே, பாராளுமன்ற இணைய தளம் மூலம் அனுப்பப்படும் தகவல்கள் வெளியிடங்களுக்கு செல்லவில்லை.
குறிப்பாக பாராளுமன்றம் மூலம் எம்.பி.க்களுக்கு அனுப்பக்கூடிய இ-மெயில்களை சம்பந்தப்பட்டவர்கள் பார்க்க முடியவில்லை. இதை யார் செய்தார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது. தீவிரவாத குழுக்களை சேர்ந்தவர்கள் இதை செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.