பாகிஸ்தான் எந்நேரத்திலும் உங்களுடன் துணைநிற்கும் என அந்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்.ஜெனரல் ரிஸ்வான் அக்தர் மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தான் சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அந்நாட்டு படை அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார்.
அந்த வகையில், பாகிஸ்தான் தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் தலைவராக இருக்கும் அந்நாட்டு புலனாய்வு அமைப்பான ஐ.எஸ்.ஐ அமைப்பின் முன்னாள் தலைவர் லெப்.ஜெனரல் ரிஸ்வான் அக்தரை மகிந்த சந்தித்து பேசியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது, “எந்நேரத்திலும், பாகிஸ்தான் உங்களுடன் நிற்கும் என லெப்.ஜெனரல் ரிஸ்வான் அக்தர் மகிந்த ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளதாக” அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சிறப்பு உரையாற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அழைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை பாகிஸ்தான் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.