கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மற்றும் மேலும் சில வேட்பாளர்களின் தேர்தல் பிரசார விளம்பரங்களை ஒளிப்பரப்பியத்தில் நடந்த சுமார் 15.5 கோடி நிதி மோசடி தொடர்பாக பாரிய ஊழல், மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பில் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் விமலசேன ரூபசிங்க, முன்னாள் பணிப்பாளர் சந்திரபால லியனகே, முன்னாள் பணிப்பாளர் (விற்பனை) சனத் தளுவத்த உட்பட அழைப்பாணை விடுக்கப்பட்ட 8 பேர் இன்று (16) ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளனர்.
கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பர் 8 ஆம் திகதி முதல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 5 ஆம் திகதி வரை ரூபவாஹினி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்ட தேர்தல் விளம்பரங்களுக்கு கட்டணங்களை அறவிடாத காரணத்தினால், குறித்த முன்னாள் அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.