இறுதி யுத்தத்தில் முன்னாள் அதிபர் மகிந்த ராஐபக்கச வெற்றி பெறவில்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொடிய யுத்தத்தினால் பொதுமக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களின் இணையத்திற்கான அறக்கட்டளை பதிவு நிகழ்வு இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டில் அனைத்து மக்களும் இன, மொழி பேதமின்றி ஒற்றுமையுடன் வாழவேண்டும். எமது நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்திச் செல்லவேண்டும்.
இன்று புலம் பெயர் நாட்டில் இருந்து வந்து உதவி செய்யும் விவேகானந்தன் சிவாஜி உள்ளிட்டோர் போல எமது மக்களின் நலன்களில் அக்கறையுள்ள டயஸ்போராக்களையும் இங்கு வருமாறு அழைக்கின்றேன்.
இந்நிலையில். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.