வடமாகாணத்தில் அமைச்சு பதிவிகளில் வெற்றிடம் ஏற்பட்டுள்ள நிலையில், மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு அமைச்சு பதிவி ஒன்றை முதலமைச்சர் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு இலங்கை தமிழரசு கட்சி ஆதரவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிவில் மற்றும் பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன.
வடமாகாண சபையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், அமைச்சு பதவிகளிலும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் மீண்டும் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இந்த குழப்பங்களுக்கு வடமாகாண சபையில் இடமளிக்க கூடாது.
வடமாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடைய இன்னும் ஒரு வருடமே எஞ்சியுள்ளது. இவ்வாறான நிலையில் வடமாகாண சபையில் ஏற்படும் குழப்பங்களினால் மக்களுக்கான பணிகளில் தாமதம் ஏற்படும்.
எனவே, விரைவாகவும், சுமூகமான முறையிலும் அமைச்சர்களை நியமிக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இந்நிலையில், வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரனுக்கு அமைச்சு பதவி ஒன்றை முதலமைச்சர் வழங்க வேண்டும் என சிவில் மற்றும் பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன.
“மாகாணசபை தேர்தலில் அனந்தி சசிதரன் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றுள்ளார். அத்துடன், யுத்த பாதிப்புகளை நேரடியாக சந்தித்த ஒருவர்.
மிகவும் துணிச்சலுடன் மக்கள் போராட்டங்களில் கலந்துகொண்டுள்ளதுடன், ஜெனிவா சென்று தமிழ் மக்களின் உண்மை நிலையினை வெளிப்படுத்திய ஒருவர்.
எனவே, அனந்தி சசிதரனுக்கு அமைச்சு பதவி ஒன்றை முதலமைச்சர் வழங்க வேண்டும் என சிவில் மற்றும் பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளன.