மன்னாரில் உயர் தொழில் கல்வி நிறுவனத்தின் கல்வி பணிகள் ஆரம்பம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மன்னாரில் உயர் தொழில் கல்வி நிறுவனத்தின் கல்வி பணிகள் ஆரம்பம்

இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (SLIATE) கல்விசார் நடவடிக்கைகள் மன்னாரில்ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வு மன்னார் நகர சபை மண்டபத்தில் இன்று வைபவ ரீதியாக ஆரம்பிக்கப்பட்டது.
அத்துடன், மன்னார் மாவட்ட கல்வி வளர்ச்சிக்காக கடந்த 2016 செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி பாராளுமன்ற ஒன்று கூடலின் போது உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சிடம் மன்னார் மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளின் கல்வி வளர்ச்சிக்காக பல்கலைக்கழக வளாகம் ஒன்றினை நிர்மாணிக்க வேண்டும் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதன் அடிப்படையில் மன்னார் மாவட்டத்திற்கு இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனம் (Advanced Technological Institute ) ஒன்றினை நிர்மாணிப்பதற்கு உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலை அமைச்சு அனுமதி வழங்கியதோடு 400 மில்லியன் ரூபாய் நிதியும் ஒதிக்கீடு செய்யதது.
மேலும், நிகழ்வில் இலங்கை உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் கில்லரி டி சில்வா, பாராளுமன்ற உறுபினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன், மேலதிக அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர், மன்னார் மாவட்ட நகர பிரதேச செயலாளர்,மன்னார் மாவட்ட பிராந்தி சுகாதார பணிப்பாளர், வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட உயர் கல்வி நிறுவன இணைப்பாளர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

About UK TAMIL NEWS