ஆனால் அவளை நோட்டமிட்ட பக்கத்து வீட்டு ரவுடி, பணம், கார், தங்க நகைகளை காட்டி மயக்கினான்.
பின்னர் முழுவதுமாக கணவனை கைவிட்டு 2006 ஆம் ஆண்டு, அந்த ரவுடியுடன் சோளிங்கர் அருகே உள்ள கிராமத்தில் வீடு எடுத்து, கணவன் மனைவியாக வாழத் தொடங்கினர்.
மனைவியை இழந்த கணவன், அவளை கை கழுவிவிட்டு, தனது வாழ்க்கையை புதிதாக தொடங்கினான்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சோளிங்கர் அருகே அந்த ரவுடியை மடக்கியவர்கள், சரமாரியாக அரிவாளால் வெட்டியுள்ளனர்.
தலையை தனியாக துண்டித்து, சில அடி தூரத்திற்கு அப்பால் வீசிவிட்டு சென்று விட்டனர்.
இந்த கொலைக்கு கள்ளக்காதல் தான் காரணமா? அல்லது அந்த ரவுடி வேறு எங்கும் கைவரிசை காட்டி, அது பிரச்சனைக்கு காரணமாக அமைந்து விட்டதா என தெரியவில்லை.