தமிழீழ விடுதலைப் புலிகளினால் தயாரிக்கப்பட்ட ஜொணி மிதிவெடி மற்றும் கிளோமர் உள்ளிட்ட பல ஆயுதங்களின் தொழில்நுட்பங்கள் குறித்தும் அதன் தாக்கங்கள் குறித்தும் அமெரிக்கத் தூதுவர்கள் உள்ளிட்ட குழுவினர் கேட்டறிந்து கொண்டதுடன் மிகுந்த ஆச்சரியத்தையும் வெளியிட்டுள்ளனர்.
வெடிபொருள் அபாயமற்ற மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரகடனப்படுத்தும் நிகழ்வு அண்மையில் மட்டக்களப்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டபோதே அமெரிக்கத் தூதுவர்கள் உள்ளிட்ட குழுவினர் தமது ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளனர்.
குறித்த நிகழ்வில் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட வெடிபொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்ததுடன், ஜொணி மிதிவெடி குறித்தும் அதன் தொழில்நுட்பம் குறித்தும் மெக் நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் அமெரிக்கத் தூதுவர் மற்றும் கனடா, அவுஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுக்கு விளக்கங்களை வழங்கியிருந்தார்.
இந்த நிகழ்வில் அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப், கிழக்கு மாகாண முதலமைச்சர் பொறியியலாளர் நசிர் அஹமட், ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகர் ஜேம்ஜ் டோரிஸ், அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பிரேஸ் ஹற்சசன், நாடாளுமன்ற உறுப்பினர்களா அலிசாகிர் மௌலானா, எஸ்.வியாளேந்திரன், ஜப்பான் தூதரகத்தின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் கூட்டுத்தாபனப் பிரிவின் தலைவர் சாக்கி வரதனி, கனடா உயர்ஸ்தானிகராலய அரசியல் மற்றும் பொருளாதார ஆலோசகர் ஜெனிபர் ஹார்ற் பிரிகேடியர் அமித் செனவிரத்ன உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.