தாவடி உப்புமடம்சந்தியிலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது. NP BEJ 2632 ஏனு;னும் இலக்கமுடைய மோட்டார் சைக்கிளை அதிவேகத்தில் வளைந்து வளைந்து இருவர் செலுத்திவந்தபோது வீதியில் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடனும் துவிச்சக்கரவண்டியுடனும் மோதி விபத்துக்குள்ளானது .இதன்போது துவிச்சக்கரவண்டியில் சென்றபெண் படுகாயமடைந்தார்.
சுன்னாகம் பஸ் நிலையம் முன்பாக புதிதாக திறக்கப்பட்ட வரத்தகநிலையமொன்றில் வேலைசெய்யும் இருவரே மதுபோதையில் மோட்டார்சைக்கிள் செலுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு வந்த மோட்டார்சைக்கிள் உரிமையாளர் என கூறிய நபர் பாதிக்கப்பட்டவருக்கு பணம் தந்து பிரச்சினையினை முடிப்போம் எனக்கூறியவாறு தன்னிச்சையாக மோட்டார்சைக்கிளை மீட்கமுற்பட்டதால் பதட்டம் ஏற்பட்டது.தான் பல்கலைக்கழக மாணவன் எனவும் குறித்த கடையின் உரிமையாளர் எனவும் தன்னை அடையாளப்படுத்தியிருந்தார்.