விமலுக்கும், ஞானசாரருக்கும் உள்ள தொடர்பு ! கைதுக்கு பின் பிறந்த ஞானோதயம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

விமலுக்கும், ஞானசாரருக்கும் உள்ள தொடர்பு ! கைதுக்கு பின் பிறந்த ஞானோதயம்

பொலிசாரால் தேடப்பட்டுவந்த ஞானசார தேரர் தானாகவே நீதிமன்றில் சரணடைந்து பின்னர் பிணையில் விடுதலையானார்.
தேரர் தானாக முன்வந்து சரணடைந்தமைக்கும், அவருக்கு பிணை வழங்கப்பட்டதற்கும் பின்னணியில் அரசியல் பின்புலங்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.
இவ்வாறான நிலையில் பிணையில் கிடைத்த பின்னர் ஞானசாரர் தரப்பு முற்றாக மாறுபட்ட கருத்து ஒன்றினைத் தெரிவித்துள்ளது.
அதாவது நாட்டின் நீதி முறையாக செயற்படுகின்றது என்றும் ஆரம்பகாலம் முதலாக நாட்டின் நீதியையும், நீதிமன்றங்களை நம்பியுமே நாம் செயற்பட்டு வந்தோம்.
அவ்வாறான நம்பிக்கை வீண் போகவில்லை. நீதி முறையாக செயற்பட்ட காரணத்தினால் ஞானசாரதேரருக்கு பிணையும் கிடைத்தது என்று நேற்றைய தினம் பொதுபலசேனா தரப்பு தெரிவித்திருந்தது.
ஆயினும் ஞானசாரதேரர் சரணடைவதற்கு முன்னர்,
நாட்டில் முறையான நீதி இல்லை. பொலிசார் ஞானசாரரைக் கைது செய்து சிறையில் வைத்து கொலை செய்ய திட்டம் தீட்டப்படுகின்றது.
நீதி முறையானதாக இருந்தால் அனைவரையும் கைது செய்ய வேண்டும். இந்த நாட்டின் நீதி பற்றி நன்றாகவே தெரியும். நீதியை நம்பத் தயார் இல்லை எனவும் நாட்டின் நீதியை விமர்சித்தும் பொதுபலசேனா கருத்துகளை தெரிவித்து வந்தது.
எனினும் நேற்றைய தினம் அதற்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் கருத்துகளை வெளியிட்டுள்ளனர் பொதுபலசேனா அமைப்பினர்.
இதேவேளை, அண்மையில் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவும் நாட்டின் நீதியையும், நீதிமன்றங்களையும் கடுமையாக விமர்சித்து இருந்தார்.
குறிப்பாக நீதி முறையாக செயற்படவில்லை என சிறையில் உண்ணாவிரதமும் இருந்த விமல் பிணையில் விடுதலையான பின்னர் முற்றாக மாறுபட்ட கருத்தினை தெரிவித்தார்.
அதாவது நாட்டில் நீதி முறையான செயற்படுகின்றது. அந்த நீதி மட்டுமே என்னை விடுவித்தது வேறு எவரும் என்னை விடுவிக்கவில்லை என விமல் தெரிவித்திருந்தார்.
அதேபோன்றே தற்போது ஞானசாரரும் கைதுக்கு முன்னர் ஒரு கருத்தையும் பிணைக்கு பின்னர் மாற்றுக்கருத்தினையும் வெளியிட்டுள்ளார்.
இதன்காரணமாக இருவருக்கும் இடையில் இந்த விடயத்தில் தொடர்பு காணப்படுகின்றது. கைதுக்கு பின்னர் இருவருக்கும் ஞானோதயம் பிறந்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இவர்கள் மட்டுமல்லாது இனவாத குற்றச்சாட்டில் சிறைசென்று வந்த டான்பிரசாத் மற்றும் சர்ச்சைக்குரிய தேராக கைது செய்யப்பட்ட அம்பிடிய சுமன ரதன தேரர் ஆகியோரும் இதே போன்றே கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
ஆக மொத்தம் இவர்கள் அனைவரும் ஒரே வகையில் செயற்பட்டு வருகின்றனரா என்ற சந்தேகத்தினையும் ஏற்படுத்துவதாக இந்த விடயம் அமைந்துள்ளதாகவும் 

About UK TAMIL NEWS