இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ராஜ்கோட் நகரில் ஒரு நபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.
மகளுக்கு திருமணமாகி கணவருடன் வாழ்ந்து வந்த நிலையில், கணவருடன் ஏற்ப்பட்ட சண்டையால் தனது தாய் வீட்டுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை வீட்டிலிருந்த தந்தை தனது மகளை இரு முறை கற்பழித்துள்ளார். பின்னர் இது குறித்து அப்பெண் தனது 19 வயதான சகோதரருக்கு போன் செய்து கூறியுள்ளார்.
இதை கேட்டு கோபமடைந்த சகோதரர் வீட்டுக்கு சென்று, ஏன் இப்படி செய்தீர்கள் என தனது தந்தையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். பிறகு, ஆத்திரத்தில் தந்தையின் கழுத்தை நெரித்து மகன் கொலை செய்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த பொலிசார், இளைஞரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.