சிங்கள யுவதி ஒருவரைக் காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் அந்த யுவதியை கைவிட்டு விட்டு யாழ்ப்பாணத்தில் இன்னொரு யுவதியை திருமணம் முடிக்க ஆயத்தமாகிய பேராதனைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் குறித்த யுவதியின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது..
குறித்த மாணவன் தற்போது யுவதியின் உறவினர்களின் பிடியில் இரு்ந்து பொலிசாரின் துணையுடன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த யுவதியை தான் திருமணம் முடிப்பதாக பொலிசார் முன் வாக்குறுதி அளித்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
கண்டிப் பகுதியைச் சேர்ந்த பணக்கார வர்த்தகர் ஒருவரின் மகளான குறித்த சிங்கள யுவதியை யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியைச் சேர்ந்த குறித்த மாணவன் காதலித்து வந்ததுடன் அந்த யுவதியிடமிந்து பெருமளவு பணத்தைப் பெற்று உல்லாச வாழ்க்கை நடாத்தியதாகவும் தெரியவருகின்றது.