புற்றுநோய் தொடர்பான அச்சுறுத்தல் அனைவரையும் ஆக்கிரமித்து காணப்படுகின்றது.
காரணம் எதிர்பாராத விதமாக நாட்பட்ட நிலையில் தாக்கக்கூடிய நோய் என்பதால் குறிப்பாக எவரைத் தாக்கும் என்று இலகுவில் கூறிவிட முடியாது.
எனினும் இந்நோய் தொடர்பாக அனைவருக்கும் ஆறுதல் தரும் வகையில் நம்பிக்கையான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது அறிகுறி தோன்றும் முன்னரே புற்றுநோயைக் கண்டறியக்கூடிய குருதிப் பரிசோதனை ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
இப் பரிசோதனையானது குருதியில் உள்ள DNA ஐ Scan செய்யக்கூடியதாக இருக்கின்றது.
குறித்த DNA ஆனது circulating tumour DNA (ctDNA) என அழைக்கப்படுகின்றது.
இந்த DNA இனை ஸ்கான் செய்யும் முறையினை American Society of Clinical Oncology (ASCO) மேற்கொண்ட ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் இப் பரிசோதனை மூலம் புற்றுநோய் தாக்கம் தொடர்பில் 97 சதவீதம் உறுதிப்படுத்தவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.