ரஜினிகாந்த், அஜித்குமார், விஜய் இணைந்தால் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் என நடிகர் எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
பிரபல நடிகரும், பா.ஜ.க பிரமுகருமான எஸ்.வி.சேகர் அளித்துள்ள பேட்டியில், மக்கள் பணத்தை திருட வேண்டிய இடத்தில் நடிகர் ரஜினி இல்லை. எனவே அவர் அரசியலுக்கு வந்தால் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.
சிலர் தான் சினிமா இயக்குநர் என்கிறார்கள், ஆனால் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என ஊளையிடுகிறார்கள். ரஜினி அரசியலுக்கு வருவார், ஆனால் அவர் கிங்காக வருவாரா அல்லது கிங் மேக்கராக வருவாரா என்பது நமக்கு தெரியாது.
ரஜினி அரசியலுக்கு வரும் பட்சத்தில் நடிகர் அஜித் மற்றும் விஜய்யை கூப்பிட்டு பேசலாம்.
மூவரும் சேர்ந்து அரசியலில் ஈடுபடலாம் என ரஜினி அவர்களிடம் கேட்கலாம் என எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.
இது நடந்தால் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அவர்களால் நல்லாட்சி கொடுக்க முடியாதா எனவும் சொந்த உழைப்பினால் சம்பாதித்த பணத்தில் அரசியல் நடத்த வருபவர்களை பார்த்து கேள்வி கேட்க மற்றவர்களுக்கு என்ன உரிமையுள்ளது எனவும் எஸ்.வி.சேகர் வினவியுள்ளார்.