மணமக்கள் தங்களின் திருமண வாழ்க்கையை தொடரும் செய்தியை தங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் திருமண விழாவிற்கு வருகை தர வேண்டும் என்பதற்காக வேண்டுகோள் விடுக்கும் ஒரு கடிதம் தான் திருமண அழைப்பிதழ்.
அந்த திருமண அழைப்பிதழை கொடுக்கும் போது, தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பது ஏன் தெரியுமா?
திருமண அழைப்பிதழை தாம்பூலத்தில் வைத்து கொடுப்பது ஏன்?
திருமண அழைப்பிதழை நண்பர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் வழங்கும் போது, வெறும் திருமண அழைப்பிதழ் மட்டுமில்லாமல், வெற்றிலை, பாக்கு, பூ , குங்குமம் உள்ளிட்ட அனைத்தை பொருட்களையும் ஒரு தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பார்கள்.
ஆனால் சிலர் திருமண அழைப்பிதழ்களை மட்டுமல்லாமல், அரிசி, நெல் போன்ற ஏதேனும் ஒரு பொருளை கடனாக கொடுக்கும் போதும் கூட அதை தட்டு அல்லது தாம்பூலத்தில் வைத்துக் கொடுப்பார்கள்.
ஏனெனில் திருமண அழைப்பிதழ் அல்லது ஏதேனும் ஒரு பொருளை கொடுக்கும் போது வெறும் கையால் கொடுத்தால், கொடுப்பவரின் கை மேலேயும், வாங்குபவரின் கை கீழேயும் இருக்கும்.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் இருவருடைய மனதிற்குள்ளேயும் ஏற்படக் கூடாது என்பதற்காக தான் நம் முன்னோர்கள் தட்டில் அல்லது தாம்பூலத்தில் வைத்துக் கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.