ஒரு தாய்க்கு ஏற்பட்டுள்ள அவலநிலை! இன்று கோயிலில் அனாதையாக.... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஒரு தாய்க்கு ஏற்பட்டுள்ள அவலநிலை! இன்று கோயிலில் அனாதையாக....

மிழகத்தின் திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள், வேண்டுதலை நிறைவேற்ற கோயில் வளாகத்தினுள் இரவு தங்குவது வழக்கம்.
அவ்வாறு நேற்றிரவு தங்கிய பக்தர்களுக்கு, கடவுள் நினைப்பைவிடவும் குப்பம்மாள் பற்றிய கவலை அதிகம் ஆட்கொண்டது.
நள்ளிரவு ஒரு ஆட்டோவில் வந்த இருவர், 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டியைக் கந்தசுவாமி கோயில் வாசலில் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.
அவர் கைகளில் இரண்டு கட்டைப்பைகள், ஒரு தட்டு, ஒரு தம்ளர் இருந்தன. கோயில் வளாகத்தில் விரக்தியான முகத்துடன் வந்தமர்ந்த அவரிடம், அங்கிருந்த பக்தர்கள் பேச்சுக்கொடுத்தனர். அவர் சொன்ன விவரங்கள் பின்வருமாறு...
''என்னோட பேரு குப்பம்மாள். எனக்கு 3 மகன்கள், 3 மகள்கள். இதில் 2 மகள்களும் ஒரு மகனும் இறந்துட்டாங்க. எனவே, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள இரண்டு மகன்கள் வீட்டுல இருந்தேன்.
என் கணவர் இறந்து பத்து வருஷம் ஆகுது. மருமகள்கள் சரியா பார்த்துக்கிறதில்லை. பாரமா கருதி வார்த்தைகளால என்னை புண்படுத்தினாங்க.
என் மகன்கள் ரெண்டுபேரும் என் மகளுடைய வீட்டுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க, மகளும் என்னை கைவிட்டுட்டா. அதனால, என்னை இங்க கூட்டிவந்து விட்டுட்டாங்க'' என்று கண்ணீர் மல்கக் கூறினார்.
இரவு முழுவதும் கண்ணீரும் கவலையுமாக இருந்த குப்பம்மாளுக்கு, அங்கிருந்தவர்கள் ஆறுதல் கூறி உணவு வாங்கிக் கொடுத்துள்ளனர்.
முதியோர் இல்லத்தில் மகன் அல்லது மகளின் கையெழுத்தின்றி சேர்க்க முடியாது என்பதால், அங்குள்ளவர்கள் செய்வதறியாமல் குப்பம்மாளை அங்கேயே விட்டுவிட்டு, கனத்த இதயத்துடன் வீடு திரும்பியுள்ளனர்.

About UK TAMIL NEWS