யாழில் பேபியன் குறூப் ஆட்டோ திருடன் மாட்டினார் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

யாழில் பேபியன் குறூப் ஆட்டோ திருடன் மாட்டினார்

யாழில் பேபியன் குறூப் எனப்படும் ஜந்து சந்தியை சேந்த பேபியன் என்பவரால் நெல்லியடி ஆரியகுணறாஜா செல்வா எனப்படும் கள்ளமண் கண்னனின் துணையுடன் யாழில் திருட்டுகளில் ஈடுபட்டு வந்த ஆட்டோ திருடன் மாட்டினார்.
யாழ் போதனா வைத்தியசாலைக்கு முன்பாகவுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் ஆட்டோவை திருட முற்பட்ட வேளையில் அதன் உரிமையாளரால் கையும் களவுமாக ஒருவர் பிடிபட்டுள்ளார்.
இச்சம்பவமானது இன்று(9) காலை 6.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆட்டோ உரிமையாளர் தனது ஆட்டோவை நிறுத்திவைத்திருந்த இடத்திலிருந்து சற்று தொலைவில் இன்னோரு ஆட்டோ ஓட்டுனருடன் கதைத்துக்கொண்டிருந்த சமயம் திருடன் தனிமையிலிருந்த ஆட்டோவிற்குள் புகுந்து அதை இயக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எதிர்பாராத விதமாக தனது ஆட்டோவை திரும்பி பார்த்த உரிமையாளரிற்கு நிலைமை விளங்கியது.
உடனடியாக தனது நண்பர்களுடன் ஆட்டோவின் பின்புறமாக வந்து திருடனை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர்.
பின்னர் போட்டிருந்த சட்டையை கழற்றி கையை பின்புறமாக கட்டி மரத்தடியில் அமர்த்தி பொலிசாரிற்கு தகவல் வளங்கியுள்ளனர்.
இச்சம்பவத்தால் அங்கு கூட்டம் கூடி போக்குவரத்து பாதித்துள்ளது.

About UK TAMIL NEWS