பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களை ஓரங்கட்டி அனைவரையும் கவர்ந்த ஜல்லிக்கட்டு தமிழச்சி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்களை ஓரங்கட்டி அனைவரையும் கவர்ந்த ஜல்லிக்கட்டு தமிழச்சி

பிரபல திரைப்பட நடிகரான கமலஹாசன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் Bigg Boss என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
இந்நிகழ்ச்சியில் 14-பிரபலங்கள் கலந்துகொள்வதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் பிரமாண்ட வீட்டுக்குள் டிவி, போன் மற்றும் பத்திரிக்கை போன்ற வெளியுலக தொடர்புகள் எதுவும் இருக்காது. கழிவறை, குளியலறை தவிர எங்கு திரும்பினாலும் கேமராக்கள் இருக்கும்.
அதைத் தொடர்ந்து இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சி 100-நாட்கள் நடைபெறும்.
கமலஹாசன் தொகுத்து வழங்கும் Bigg Boss நிகழ்ச்சி இன்று கோலகலமாக துவங்கியது. இதில் ஸ்ரீ (மாநகரம் கதாநாயகன்),நடிகை அனுயா, வையாபுரி, ஆரார் (சைத்தான் படத்தில் நடித்தவர்), கஞ்சா கருப்பு, சினேகன், ஓவியா,ரேசா,பரணி,காயத்ரி ரகுராம்,ஆர்த்தி, கணேஷ் கணேஷ் வெங்கட்ராம், ஷக்தி வாசுதேவ் மற்றும் ஜுலி என்ற பெண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஜுலி தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் பிரபலமானவர். அப்போராட்டத்தின் போது சின்னம்மா சின்னம்மா ஒபிஎஸ் எங்கம்மா என்று கோஷமிட்டு போராடிய அவரது வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது.
அதன் பின் அவரது மீது அரசியல் சாயம் பூசப்பட்டது. அப்போது அவர் நான் மிக மிக சாதாரணப் பெண். அரசியலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.
தமிழ் உணர்ச்சியோடு, தமிழ்நாட்டுக்காக பேச வந்தேன். தனி ஆளாக மெரீனா போராட்டத்தில் கலந்து கொண்டேன் என்று கூறியிருந்தார். அவருக்கு ஆதரவும் பெருகியது.
இந்நிலையில் அவர் பிரபலங்களோடு, பிரபலங்களாக Bigg Boss நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் ஆடிய நடனம் மற்றும் கமலஹாசன் உடன் பேசிய பேச்சுக்கள் அனைவரையும் கவர்ந்தன.
ஜுலி இந்த நிகழ்ச்சியின் மூலம் புது குடும்பத்தை தேடி வந்துள்ளேன் என்று கூறினார்.

About UK TAMIL NEWS