வீட்டு வாசலில் அரிவாள் வெட்டு: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பயங்கரம்! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வீட்டு வாசலில் அரிவாள் வெட்டு: ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த பயங்கரம்!

தமிழ்நாட்டில் வீட்டு வாசல் முன்பே வழக்கறிஞர் ஒருவர் அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மேலூர் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் வழக்கறிஞர் ரவிச்சந்திரன்.
பணி முடிந்த பின்னர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு வந்தார்.
வீட்டின் அருகில் வந்த போது, ரவிச்சந்திரனை பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் மூன்று பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் ரவிச்சந்திரன் உயிருக்கு போராடினார்.
உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
முதலுதவி சிகிச்சைகள் முடிந்த பின்னர், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை கொலை வழக்காக பதிவு செய்த பொலிசார் சிசிடிவி கமெரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

About UK TAMIL NEWS