நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமரச முயற்சியில் மதத் தலைவர்கள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

நம்பிக்கையில்லாத் தீர்மானம் சமரச முயற்சியில் மதத் தலைவர்கள்

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சிக்கும் இடையில் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் மதத் தலைவர்கள் இன்று களமிறங்குவர்.
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை தமிழரசுக் கட்சி ஆளுநரிடம் கையளித்ததைத் தொடர்ந்து தமிழர் தாயகத்திலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ் மக் கள் கொதிப்படைந்துள்ளனர்.
இந்நிலையில் நிலைமையை சுமுகமாக்குவதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் கடந்த மூன்று நாட்களாக கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள போதிலும் அவை எதுவும் முழுமைபெறவில்லை.
இந்நிலையில் ஓர் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சியில் நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், யாழ்.மறைமாவட்ட ஆயர் மேதகு ஐஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை ஆகியோர் இன்று களமிறங்கவுள்ளனர்.
வடக்கு மாகாண சபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் தமிழ் மக்கள் மிகவும் குழப்படைந்துள்ள நிலையிலும், அரசியல் தலைவர்கள் தங்களைச் சந்தித்து தமது நிலைப்பாடுகளை விளக்கியிருந்ததன் அடிப்படையிலும் இரண்டு மதத்தலைவர்களும் சமரச முயற்சியில் ஈடுபடவுள்ளனர்.
இதேவேளை இரண்டு மதத்தலைவர்களும் சமரச முயற்சியில் இறங்குவதால் சுமுகமான இணக்கப்பாடு ஏற்படலாம் என அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை சமரச முயற்சியில் ஈடுபடவுள்ளன செய்தியை இரண்டு மதத் தலைவர்களும் வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவுக்கும் நேற் றிரவு தெரியப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

About UK TAMIL NEWS