சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவதன் ஊடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் என இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் படி, இலங்கையில் போர்க்குற்ற விசாரணைகளுக்கு சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்க அரசாங்கம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பொதுநலவாய நாடுகளின் நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகள் இந்த விசாரணைகளில் உள்ளடக்கப்பட வேண்டும் என்றே இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், போர்க்குற்றங்கள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டங்கள் தொடர்பாக போதிய அனுபவமிக்கவர்கள் இலங்கையின் நீதித்துறையில் இல்லை.
இதன் காரணமாகவே சர்வதேச நீதிபதிகளை போர்க்குற்ற விசாரணைகளில் உள்ளடக்குமாறு வலியுறுத்தப்படுவதாகவும், இதனூடாக, போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான நம்பிக்கையை மேம்படுத்த முடியும் எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிட்டுள்ளார்.