பேருந்து கட்டணங்களின் வருடாந்த மீளாய்வின்படி எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி முதல் இலங்கை போக்குவரத்து சபையினதும், தனியார் பேருந்துகளினதும் கட்டணங்கள் 6.5 வீதத்தால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை தனியார் பேருந்து சங்க உரிமையாளர் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன இத்தகவலை வெளியிட்டார்.
எரிபொருள், டயர்கள் மற்றும் டியூப்கள், பழுதுபார்ப்பு செலவுகள், பராமரிப்பு செலவுகள், சாரதி நடத்துனர் சம்பள உயர்வுகள், உதிரிப்பாகங்கள் ஆகியவற்றில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
இதைச் சமாளிப்பதற்கு பேருந்து கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வாவும் கவனம் செலுத்தியிருக்கிறார். எவ்வாறாயினும் இறுதி முடிவு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கைகளிலேயே உள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.