ஒலிம்பிக்கில் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக கர்நாடக மாநில பாடசாலை பாடப்புத்தகத்தில் தவறான தகவல் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக பாடசாலைகளில் அம்மாநில கல்வித் துறையின் சார்பில் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதில், பத்தாம் வகுப்பு உடற்கல்விக்கான பாடப்புத்தகத்தில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு பதிலாக டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் பெயர் இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
அதேபோல, கடந்த 2016ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து வெண்கலப் பதக்கம் வென்றதாக தவறான தகவல் இடம்பெற்றுள்ளது.
உண்மையில் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். இதுதவிர பெர்சியன் வளைகுடா, வெற்றி உள்ளிட்ட வார்த்தைகளும் எழுத்துப் பிழையுடன் அச்சுப்பிழையுடன் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.