நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரதன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கட்சி, ஐக்கிய தேசியக் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதுரலிய ரதன தேரருக்கும், ஜாதிக ஹெல உறுமய கட்சிக்கும் இடையில் அண்மைக் காலமாக கடும் முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்ற நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் உறுப்பினராக செயற்பட்டு வந்த ரதன தேரர் கட்சியின் ஒழுக்க விதிகளை மீறியுள்ளதாக கட்சியின் தலைவர் ஹெடில்லே விமலசார தேரர் குற்றம் சுமத்தியுள்ளார்.
எனவே, ரதன தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபிர் ஹாசிமிடம் ஜாதிக ஹெல உறுமய கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. உத்தியோகபூர்வ அடிப்படையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துரலிய ரதன தேரர் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.