மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை போக்கும் உணவுகள் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, சோர்வை போக்கும் உணவுகள்

பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் மாதவிலக்கு சமயத்தில் அடிவயிற்றில் வலி ஏற்படுகிறது. அதுபோல, உடல் சோர்வும் ஏற்படுகிறது. வலியைப் போக்கும் வழியும், அந்த நேரங்களில் எந்த உணவு சாப்பிட வேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
28 நாட்களுக்கு ஒருமுறை கருத்தரிக்காத முட்டையுடன், எண்டோமெட்ரியம் என்னும் கர்ப்பப்பையின் உட்புறச் சவ்வு வெளியேறுவதைத்தான் மாதவிலக்கு என்கிறோம். பெரும்பாலான பெண்களுக்கு, வலி, எரிச்சல், கோபம், சோர்வு போன்ற பிரச்னைகள் வரும். இதற்கு, வலி நிவாரணி மாத்திரைகளைதான் சாப்பிட வேண்டும் என்று இல்லை. சரியான உணவுப்பழக்கத்தைக் கடைப்பிடித்தாலே வலி குறைந்த மாதவிலக்கை எதிர்கொள்ளலாம்.
மாதவிலக்குக் காலத்தில், டீ, காபி, ஊறுகாய், சிப்ஸ், குளிர்பானம், மசாலா, ஆயத்த, அசைவ உணவுகள் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். ஒமேகா 3 அமிலங்கள் நிறைந்த பருப்பு வகைகள், கால்சியம் சத்துள்ள கேழ்வரகு, மீன், முட்டை, கீரை, புரோகோலி, வைட்டமின் சி சத்துள்ள காய்கறி மற்றும் பழங்கள், சோர்வைப் போக்க இரும்புச் சத்துள்ள உணவுகள், உடல்சூட்டைக் குறைக்க இளநீர், நீர்மோர், வெந்தயம், வெள்ளரி, தேவையான தண்ணீர், வெண்ணெய், மாதுளை போன்றவற்றைச் சாப்பிடலாம். மேலும், இந்த நாட்களில் எடை குறையும் என்பதால், அதை ஈடுகட்ட புரதம் நிறைந்த பருப்பு வகைகளும், சர்க்கரைக்குப் பதிலாகத் தேனையும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் வலி அதிகரித்துக்கொண்டே சென்றால், கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் தோன்றும் பிரச்னையாகவும் இருக்கலாம். தொடர்ந்து, வலி குறையாத மாதவிலக்கை எதிர்கொண்டால், மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்

About UK TAMIL NEWS