அமைதியை நிலைநாட்டும் நாட்டுப் பிரஜைகளை உருவாக்குவதில் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு முக்கிய பங்குண்டு என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், குறித்த பணியை இக்கல்லூரி நிறைவேற்றிவருகிறது எனவும் அவர் கூறியுள்ளார்.
குறித்த கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பித்த கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை,
“நாட்டின் இனப்பிரச்சினைக்கு 1956ஆம் ஆண்டு தனிச்சிங்கள சட்டம் அடிப்படையாக அமைந்தது. இனப்பிரச்சினைக்கு தீர்வாக 13ஆவது அரசியல் திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.
இதேவேளை, எம்மக்களின் அமைதியான வாழ்விற்காக நாம் சேர்ந்து உழைக்க வேண்டும். புனித பத்திரிசியார் கல்லூரி கடந்த காலங்களில் மிகச்சிறந்த கல்விமான்களையும் சமய, அரசியல் தலைவர்களையும் உருவாக்கியுள்ளது.
தொடர்ந்தும் இக்கல்லூரியானது மன்னிக்கும் மாண்புள்ள மனிதர்களை உருவாக்குவதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.