கேரளாவில் சர்ச்சையான பள்ளி சீருடை: மாணவிகளின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டவர் மீது வழக்குப் பதிவு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கேரளாவில் சர்ச்சையான பள்ளி சீருடை: மாணவிகளின் படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டவர் மீது வழக்குப் பதிவு

கேரள மாநிலம் கோட்டையம் நகரத்தில் உள்ள அருவிதுரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட சீருடை சர்ச்சைக்குள்ளாகி உள்ளது. மேலும் மாணவிகளின் சீருடையை விட, சீருடையுடன் அவர்களது படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட புகைப்படக்காரருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவர் தனது நண்பரிடம் இருந்து இந்த படத்தை பெற்றதாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக படத்தை வெளியிட்ட புகைப்படக்காரர் மீது பள்ளி நிர்வாகம் குழந்தைகள் வன்கொடுமை பாதுகாப்பு சட்டத்தின்(POCSO) கீழ் போலீசில் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் எராட்டுபெட்டா போலீசாரும் புகைப்படக்காரர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து பள்ளியின் முதல்வர் ரோஸ்லி கூறுகையில், “புகைப்படம் வெளியாகும் வரை மாணவிகளின் பெற்றோர்கள் தரப்பில் இருந்து இதுவரை எந்தவொரு எதிர்ப்பும் எழவில்லை” என்றார்.
பள்ளி சீருடையில் எந்த பிரச்சனையும் இல்லை, பார்ப்பவர்களின் கண்களில் தான் உள்ளது என்று பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் சபு சைரைக் கூறினார்.
இதனிடையே சர்ச்சைக்குரிய இந்த சீருடையை பள்ளி நிர்வாகம் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளது.

About UK TAMIL NEWS