இலங்கை தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தா விதாரணவிடம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் இன்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரின் அழைப்புக்கு அமைய அவர் இன்று முற்பகல் 9 மணிக்கு அங்கு சென்றுள்ளார்.
கபில ஹெந்தா விதாரண கடந்த 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகியிருந்ததுடன் 8 மணிநேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன.
வடக்கு, கிழக்கில் இயங்கும் கம்பி இணைப்பு தொலைக்காட்சி மற்றும் சில நிறுவனங்களின் ஊடாக மில்லியன் கணக்கான பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்புச் செய்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக ஹெந்தா விதாரணவுக்கு எதிராக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.