கொழும்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 4 பேரை பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
மேல் மாகாண மோசடி தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரின் ஆமர் வீதியில் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
கிராண்ட்பாஸ் பிரதேசத்தை சேர்ந்த 34 வயதான இந்த நபரிடம் இருந்து 1.27 கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதேவேளை வெலிகடை பொலிஸ் பிரிவில் 2.90 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ராஜகிரிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே பிலியந்தலை பொலிஸ் பிரிவில் பிரிய பிளேஸ் பகுதியில் 567.23 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரள்ளை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதான பெண்ணையே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இதேவேளை முகத்துவாரம் ராசமுலகந்தை சந்தி பகுதியில் 10 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளம் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதான மட்டக்குளி பிரதேசத்தை சேர்ந்த இந்த பெண்ணை கொழும்பு வடக்கு மோசடி தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.