இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனங்களால் அரசாங்கத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் நடைபெற்ற மாநாட்டுக்காக கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனங்களை விற்பனை செய்யும் போது அரசாங்கத்திற்கு 400 மில்லியன் நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதி அமைச்சின் வருடாந்த அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டிற்காக 82 மோட்டார் வாகனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வெளிநாட்டு அரச தலைவர்களின் பயன்பாட்டிற்கு என கூறி கடந்த அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்ட மோட்டார் வாகனங்கள், மஹிந்தவின் மகன் நாமல் ராஜபக்ச, தருணயன்ட ஹெட்டக் அமைப்பு மற்றும் நீலப்படை அணியின் முக்கியஸ்தர்களின் பயன்பாட்டுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
540 இலட்சம் ரூபாய் வரை பெறுமதியிலான இந்த மோட்டார் வாகனங்கள் இவ்வாறு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில் மாநாடு முடிந்த பின்னர் இவை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யப்படும் என அப்போது கூறப்பட்டது.
எனினும் இவற்றில் எத்தனை வாகனங்கள் பயன்பாட்டிற்கு எடுக்கப்பட்டதென இன்னமும் தகவல் வெளியாகவில்லை.