60 வயது நடிகருக்கு ஜோடி 20 வயது நாயகியா? மலையாள நடிகை ஆவேசம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

60 வயது நடிகருக்கு ஜோடி 20 வயது நாயகியா? மலையாள நடிகை ஆவேசம்

பிரபல நடிகருடன் குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் நடிகை, பின்னர் வளர்ந்த பிறகு அதே நடிகருக்கு ஜோடியாவதும், கொஞ்சம் வயதானால் அந்த ஹீரோவுக்கு அம்மாவாக நடிப்பதும் சினிமாவில் சாதாரண வி‌ஷயங்கள்.
இதுபற்றி மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகை ரீமா கல்லிங்கல் கூறும்போது,  ‘‘ஒரு 20 வயது நடிகையை 60 வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க வைக்கிறார்கள். அதே சமயத்தில் 50 வயது நடிகையை 60 வயது நடிகருக்கு அம்மாவாக நடிக்கச் சொல்கிறார்கள்.

நடிகர்களுக்கு கிடைக்கும் சம்பளம், புகழ், மரியாதை ஆகியவை நடிகைகளுக்கு மிகக்குறைவாகவே கிடைக்கிறது. மலையாளம் மட்டும் அல்ல மற்ற மொழி திரை உலகிலும் 60 வயது நடிகர்களுக்கு 20 வயது நடிகைகளைத்தான் ஜோடியாக்குகிறார்கள். சில நடிகர்கள் தங்கள் மகளை விட குறைந்த வயதுடைய பெண்களுடன் ஜோடியாக நடிக்கிறார்கள்’’.
இவ்வாறு அவர் கூறினார்.

About UK TAMIL NEWS