உலகின் அதிவேக கேமரா அறிமுகம்: நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை எடுக்கும் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

உலகின் அதிவேக கேமரா அறிமுகம்: நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை எடுக்கும்

உலகில் அடுத்த தலைமுறை சூப்பர் – ஃபாஸ்ட் கேமரா 15 தான். தற்சமயம் பயன்பாட்டில் இருக்கும் அதிவேக கேமராக்களை விட பல லட்சம் மடங்கு வேகமான கேமராவான 15, ஃபான்டம் ஃபிளெக்ஸ் போன்று ஸ்லோ-மோ கேமரா ஆகும். இதை கொண்டு ஒளியின் பயணத்தையும் துல்லியமாக படமாக்க முடியும்.
ஸ்வீடன் நாட்டின் லண்ட் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர்கள் குழு நொடிக்கு 5 லட்சம் கோடி புகைப்படங்களை படமாக்கும் கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இது சரியாக வெவ்வேறு ஃபிரேம்களை படமாக்காமல் ஒவ்வொரு ஃபிரேம்களில் இருந்தும் வெவ்வேறு புகைப்படங்களை பிரித்து எடுக்கும்




அதாவது கேமராவின் ஷட்டர் திறந்திருக்கும் போது வெவ்வேறு லேசர் மின்விளக்குகள் பொருளின் மீது பாயும். இவ்வாறு பாயும் போது ஒவ்வொரு லேசர் பிளாஷூம் விசுவல் முறையில் கோடிங் செய்யப்பட்டு, பின் மற்ற தகவல்களை டீக்ரிப்ஷன் மூலம் பிரித்து எடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு குழு வேதியலில் பிளாஸ்மா டிஸ்சார்ஜ்களை படமாக்க பயன்படுத்தப்படும் என்றும், வெவ்வேறு ரசாயன மாற்றங்களையும் மிக அழகாக படமாக்கும் என தெரிவித்துள்ளது. இந்த கேமரா மூலம் கண் இமைப்பதை படமாக்கி அதனை நொடிக்கு 24 ஃபிரேம் என்ற வீதத்தில் பிளே செய்தால் வீடியோவை பார்த்து முடிக்க 2000 ஆண்டுகள் ஆகும்.

About UK TAMIL NEWS