மும்பை தனியார் நிறுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை பத்திரிநாத்தில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பைலட் உள்ளிட்ட ஹெலிகாப்டரில் பயணம் செய்த 5 பக்தர்கள் உயிர் தப்பினர். என்ஜினியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பையிலிருந்து ஹரித்துவாருக்கு செல்லும் வழியில் மலையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனையடுத்து, மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்