பெண்னிடம் 30 இலட்சம் மோசடி செய்த பிரபல வானொலி அறிவிப்பாளர் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பெண்னிடம் 30 இலட்சம் மோசடி செய்த பிரபல வானொலி அறிவிப்பாளர்

முகப்புத்தகம் ஊடாக யுவதி ஒருவருடன் பழகி 30 இலட்சம் ரூபா பணத்தை அவரிடம் ஏமாற்றி வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சாவகச்சேரி நீதிமனிறில் முற்படுத்தப்பட்ட கொழும்பில் இருந்து ஒலிபரப்பாகும் பிரபல வானொலி ஒன்றின் அறிவிப்பாளர் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று (9) பிணையில் விடுவிக்கப்பட்டார்.
30 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று ஆட்பிணை மற்றும் 30 இலட்சம் ரூபா பெறுமதியான காணி ஒன்றின் பிணையில் செல்ல இவருக்கு சாவகச்சேரி நீதிவான் திருமதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அனுமதியளித்தார்.
சந்தே நபர் பிரதி வெள்ளிக்கிழமை தோறும் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கையொப்பம் இடவேண்டும் எனவும் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
குறித்த நபர் தென்மராட்சிப் பகுதியியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் முகப்புத்தகம் ஊடக பழகி அவரிடம் இருந்து சுமார் 30 இலட்சம் ரூபா வரை ஏமாற்றி பணம் பெற்றுள்ளார்.
பின்னர் அந்தப பெண்ணுடனான தொடர்புளை அவர் துண்டித்துள்ளார்.
குறித்த நபரின் கைத்தாலைபேசி மற்றும் வானொலி நிலைய தொலைபேசிகளுக்கு அழைப்பை எடுத்த போதெல்லாம் அவற்றைத் துண்டித்து வந்ததாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே இந்த மோசடி குறிது பாதிக்கப்பட்ட யுவுதி கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டுக்கு அமைய அறிவிப்பாளர் கடந்த வாரம் குருநாகல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அறிவிப்பாளரை கடும் நிபந்தனையுடன் கூடிய பிணையில் செல்ல நீதிவான் நேற்று அனுமதி வழங்கினார்

About UK TAMIL NEWS