75 வயதான பெண்ணை திருமணம் செய்வதாக கூறி காதல் தொடர்பை பேணி, 22 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இளைஞனை, நிபந்தனை அடிப்படையில் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
தனது பாட்டி முறையான பெண்ணுடன் 26 வயதுடைய இளைஞன் காதல் தொடர்பு வைத்திருந்துள்ளார்.
இவ்வாறு பாட்டியுன் காதல் தொடர்பை வைத்திருந்த இளைஞன் திருமணமானவர் என, தெரிவிக்கப்படுகின்றது.
நீர்கொழும்பு, ரத்மல்கஹ எல்ல பிரதேசத்தில் வசிக்கும் இளைஞரான குறித்த நபர், சீதுவை பிரதேசத்தைச் சேர்ந்த 75 வயது காதலியிடம் 22 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளார்.
பணத்தை மோசடி செய்ததாக காவல்துறை அலுவலகத்துக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய, சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர், மோசடி செய்யப்பட்ட பணத்தில் 10 இலட்சம் ரூபாயை, பெண்ணிடம் கொடுக்க சந்தேக நபரான இளைஞன் முன்வந்துள்ளார்.
இதனையடுத்து, 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரபிணையில் செல்வதற்கு, நீர்கொழும்பு பிரதான நீதவான் அனுமதியளித்துள்ளார்.
இதேவேளை, 10 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுக்கொண்டு சமரசம் செய்துகொள்ள இரு தரப்பினரும் சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.