சுவிட்சர்லாந்து நாட்டில் குப்பைகளை சேகரித்து மறுசுழர்ச்சி செய்தபோது 25 கிலோ எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் தான் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சூரிச் மாகாணம் முழுவதும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு அதிநவீன தொழில்நுட்பத்தில் மறுசுழர்ச்சி செய்யப்பட்டு வருகிறது.
குப்பைகளை பிரித்தெடுக்க நவீன இயந்திரங்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
சூரிச் மாகாணத்தில் மட்டும் கடந்த 2016-ம் ஆண்டில் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ள குப்பை சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த குப்பைகள் மீண்டும் ஆராய்ப்பட்டு இதிலிருந்து 43,000 டன் எடையுள்ள உலோகங்கள் பிரித்தெடுக்கப்பட்டன.
பின்னர், இந்த உலோகங்கள் Hinwil நகருக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ஆலையில் மீண்டும் தனித்தனி உலோகங்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரித்தபோது 4,000 டன் எடையுள்ள இரும்பு, அலுமினியம், வெங்கலம், வெள்ளி உள்ளிட்ட உலோகங்கள் சேகரிக்கப்பட்டன.
இதே வழிமுறையை பின்பற்றி இந்த உலோகங்களில் சேர்ந்திருந்த தங்கத்தை அதிநவீன இயந்திரம் பிரித்தெடுத்துள்ளது. இவ்வாறு தனித்தனியாக பிரித்தபோது இறுதியில் 25 கிலோ எடையுள்ள தங்கம் கிடைத்துள்ளதாக துப்புரவு பணியை மேற்கொள்ளும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குப்பைகளில் இருந்து கிடைத்த இரும்பு, வெள்ளி, தங்கம் உள்ளிட்ட உலோகங்களை சந்தை விலைக்கு விற்பனை செய்து நலத்திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.