- Eelatheepam Sri Lankan Breaking NEWS
உலகின் பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் சேவையை மாதந்தோரும் 200 கோடி பேர் பயன்படுத்தி வருவதாக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் தெரிவித்துள்ளார். மார்ச் 31-ந்தேதி வரை பேஸ்புக் சேவையை சுமார் 194 கோடி பேர் பயன்படுத்தினர்.
பேஸ்புக் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறித்து மார்க் ஜூக்கர்பெர்க் பதிவிட்டுள்ள பேஸ்புக் போஸ்ட்-இல் ‘இன்று காலை வரை பேஸ்புக் சமூகத்தில் 200 கோடி பேர் இணைந்துள்ளனர். உலகை இணைப்பதில் முன்னேற்றம் அடைந்து வருகிறோம், தொடர்ந்து உலகை இணைப்போம். இந்த பயணத்தில் உங்களுடன் பயணிப்பது பெருமையாக உள்ளது’. என அவர் குறிப்பிட்டுள்ளார்
இது கடந்த ஆண்டை விட 17 சதவிகிதம் அதிகம் ஆகும். பேஸ்புக் வளர்ச்சி மற்ற சமூக வலைத்தளங்களை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது. ட்விட்டர் சேவையை ஏப்ரல் மாத வாக்கில் சுமார் 32.8 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதேபோல் ஸ்நாப்சாட் சேவையை மார்ச் 31-ந்தேதி வரை 16.6 கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
பேஸ்புக் தனது பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க முயற்சித்து வருகிறது, குறிப்பாக வளரும் நாடுகளில் குறைவாக உள்ள எண்ணிக்கையை அதிகரிக்க பேஸ்புக் முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு புதிய வசதிகளை பேஸ்புக் வழங்கி வருகிறது. அந்த வகையில், நேரலை வீடியோ வசதி, கேமரா அம்சங்களில் புதிய வசதிகளை பேஸ்புக் சேர்த்துள்ளது. இதேபோல் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி சார்ந்த வசதிகளை வழங்கும் பணிகளையும் பேஸ்புக் மேற்கொண்டு வருகிறது

About UK TAMIL NEWS