தம்புள்ளை மருத்துவமனையில் நபரொருவரின் வயிற்றில் இருந்து 10 கிலோ எடையுடைய கட்டியொன்று சத்திரசிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
மெல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த எம்.பி.சேனாநாயக்க (62 வயது) என்ற நபரின் வயிற்றில் இருந்தே இந்த கட்டி அகற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் வயிற்று வலி காரணமாக கடந்த தினத்தில் தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் குறித்த நபருக்கு சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், இடது சிறுநீரகத்திற்கு அருகில் வயிற்றில் பாரிய கட்டியொன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபருக்கு தம்புள்ளை மருத்துவனையின் சிறப்பு நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்கள் குழுவினரால் இன்றைய தினம் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், சுமார் பத்து கிலோ எடையுடைய குறித்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது.
குறித்த நபர் நல்ல நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டியை ஆய்வகத்திற்கு அனுப்ப தீர்மானித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.