வித்தியா படுகொலை வழக்கு : தீர்ப்பாயத்தின் 3 நீதிபதிகளும் திங்களன்று நேரில் ஆராய்வர் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வித்தியா படுகொலை வழக்கு : தீர்ப்பாயத்தின் 3 நீதிபதிகளும் திங்களன்று நேரில் ஆராய்வர்

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்ட தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நாளைமறுதினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்க்பபட்டது.

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கை யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 நீதிபதிகள் தீர்ப்பாயம் (ட்ரயல் அட் பார்) முன்னிலையில் நடாத்த தலைமை நீதியரசர் பிரியசாத் டெப் பரிந்துரை 
வழங்கினார். 

வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி பாலேந்திரன் சசிமகேந்திரன் தலைமையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் ஆகியோரை தீர்ப்பாயத்தின் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

இந்த வழக்கின் விசாரணைகளை விரைவில் ஆரம்பிப்பது தொடர்பில் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகளும் நாளை மறுதினம் திங்கட்கிழமை சந்தித்துக் கலந்துரையாடுவர் என்று தெரிவிக்கப்பட்டது. தீர்ப்பாயத்தின் அடைவிடம், சாட்சியப் பதிவுகளுக்கான ஏற்பாடுகள் உள்ளிட்ட விடயங்களை அவர்கள் ஆராய்வர் என்றும் தெரிவிக்கப்பட்டது. 

About UK TAMIL NEWS