சீரற்ற வானிலை காரணமாக அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
நிலவும் அனர்த்த நிலைமை வழமைக்குத் திரும்பும் வரை அனைத்து பொலிஸாருக்கும் விடுமுறைகள் வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அனர்த்தத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளுக்காக 5000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, பொலிஸ் தலைமையகத்தில் இடர் முகாமைத்துவ கண்காணிப்பு நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அனர்த்தங்கள் தொடர்பில் 0112 430 914, 0112 395 605 அல்லது 0112 384 024 என்ற இலக்கதிற்கு அறியப்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.