வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை சகோதர சகோதரிகளுடன் இந்தியா கைக்கோர்த்திருக்குமென இந்திய பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தனது நாட்டின் முதலாவது நிவாரணக் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளதுடன் இரண்டாவது கப்பல் நாளைய தினம் இலங்கையை வந்தடையும் என பாரதப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.